ராணிப்பேட்டை:நடிகர் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) வெளியானது. ஆற்காட்டில் உள்ள பிரபல லட்சுமி திரையரங்கத்தில் உள்ள இரு அரங்கிலும் துணிவு திரைப்படம் வெளியாகயிருந்த நிலையில் இரவு 10 மணி முதல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமான ரசிகர்கள் திரையரங்கின் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் சிலர் திரையரங்கின் கதவை திறக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற திரையரங்கின் மேலாளர் பிரபாகரன் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதோடு, நகத்தைக் கொண்டு அவரது கண்களை கீறியுள்ளனர்.