தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை வன்கொடுமை செய்த வேன் ஓட்டுநர் கைது! - சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது

ராணிப்பேட்டையில் நட்பாக பழகிய 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 28, 2023, 9:58 PM IST

ராணிப்பேட்டை :ஒரு கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கரோனா ஊரடங்கின் போது தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றுக்கு பணிக்கு சென்றார்.

அப்போது, வேன் ஓட்டுநர் சுந்தர்ராஜ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுந்தர்ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்குச் சென்ற சிறுமையை ஆசை வார்த்தை கூறி சுந்தர்ராஜ் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த சிறுமியின் பெற்றோர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுந்தர்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:போலீஸ் எனக் கூறி 17 வயது மாணவி வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details