ராணிப்பேட்டை:ஆற்காடு ஒன்றியத்தின் இரண்டாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலராக, 21 வயது இளம்பெண் தீபிகா வெற்றி பெற்றிருந்தார்.
இத்தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு ஒன்றியத்தில் இரண்டாவது வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பட்டதாரியான செல்வி. தீபிகா போட்டியிட்டு 2 ஆயிரத்து 344 வாக்குகள் பெற்று ஆயிரத்து 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள தீபிகா ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பேட்டியில், 'முதலில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும். அதில், மிகவும் முக்கியமாக குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வழி செய்வேன். மேலும் சாலை வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன்'
அரசியல் வந்த காரணம் என்ன?
'நான் அரசியல் வருவதற்கு முக்கியக் காரணம், எனது தந்தை இளவழகன். அவர் அரப்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவராக இருந்தார்.
அவர் தலைவராக இருந்த காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் மிகவும் அழகாக செய்தார். எனவே, அவரிடம் இருந்து எனக்கு இந்த ஆர்வம் வந்தது. நான் வெற்றி பெற்றதற்கான காரணமும் எனது தந்தை தான்' என்று தெரிவித்தார்.