ராணிப்பேட்டை:அரக்கோணம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்வீதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நேற்று (ஜனவரி 22) திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர். அதன்பின் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த அம்மனுக்கு கிரேன் மூலம் மாலை போடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு - keelveedhi
அரக்கோணம் கீழ்வீதி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அரக்கோணம் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கேரளா லாட்டரி சீட்டு விற்ற விசிக நிர்வாகி உத்தமபாளையத்தில் கைது