ராணிப்பேட்டை:ஆற்காடு கடப்பந்தாங்கல் அருகே திருமண நாளை முன்னிட்டு தம்பதி, குழந்தை உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஈஸ்வரன்-சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், ஈஸ்வரன் சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு இன்று திருமண நாள் என்பதால் இருவரும் அவர்களது 3 வயது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பச்சயம்மன் கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது ஆற்காட்டில் இருந்து கலவை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இறக்கும் தருவாயிலும் கூட தம்பதி தன் 3 வயது ஆண் குழந்தையை சாலையோர செடி மீது வீசி காப்பாற்றி உள்ளனர்.
இதையும் படிங்க:அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!