ராணிப்பேட்டை:முத்துக்கடை அருகே உள்ள ஆட்டோ நகர் பகுதியில், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி, பெங்களூர் குண்டூருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவரை இடித்த லாரி, அந்த தடுப்புச் சுவரில் ஏறி நின்று பயங்கர விபத்துக்குள்ளானது.
Ranipet: தடுப்புச் சுவரில் மோதி கண்டெய்னர் லாரி விபத்து - ranipet news
ராணிப்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று, தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருவலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் விக்டர் என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், இது குறித்த தகவல் அறிந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தடுப்புசுவரில் ஏறி நின்று விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை கிரேன் இயந்திரத்தை வரவழைத்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து காரணமாக சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:Dindigul Accident: வத்தலகுண்டு அருகே கார் - லாரி மோதி விபத்து: பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு!