தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லிக்குப்பம் காளை விடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் திடீரென மோதல்.. இளைஞருக்கு கத்திகுத்து - நடந்தது என்ன? - காளை விடும் திருவிழா

Attempt To Murder: பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற காளை விடும் நிகழ்ச்சியில், மதுபோதையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attempt To Murder case at Ranipet
காளை விடும் நிகழ்ச்சியில் திடீரென இளைஞர்கள் மோதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 11:38 AM IST

ராணிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயம், காளை விடும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், சிப்காட் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் காளை விடும் திருவிழாவின் போது, மதுபோதையில் இருந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் (28) என்ற இளைஞரை கத்தியால் குத்தியதில், வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சிப்காட் அடுத்த நெல்லிக்குப்பம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த இளைஞர், விக்னேஷ்(28). இவர் வெல்டிங் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்க விக்னேஷ் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: சிறாவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

அப்போது, தனது வீட்டிற்கு பக்கத்து தெருவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதில், ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த காரணத்தால், பழிவாங்கும் நோக்கில் வீட்டிற்குச் சென்ற விக்னேஷை பின்தொடர்ந்து சென்ற சத்தியராஜ், அவரது வீட்டில் வைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் வயிற்றுப் பகுதியில் விக்னேஷ்-க்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, சத்தியராஜை தடுக்க முயன்ற பெற்றோருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விக்னேஷ், சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி செய்த பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது இந்த மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்துவிட்டு, தப்பி தலைமறைவாக உள்ள சத்தியராஜையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளக்குட்டை எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்காததால் ஆத்திரம்.. பேருந்து சிறைபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details