தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு குழந்தைகள் இல்லத்தை திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராணிப்பேட்டையில் முதலமைச்சர்

திடீர் ஆய்வின் போது சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு குழந்தைகள் இல்லத்தை திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு குழந்தைகள் இல்லத்தை திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Jun 30, 2022, 6:49 PM IST

ராணிப்பேட்டை:புதியதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 30) ராணிப்பேட்டைக்கு வருகை தந்திருந்தார்.

முதலமைச்சர் செல்லும் வழியில் ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 47 ஆண் பிள்ளைகள் தங்கி பள்ளி பயின்று வருகின்றனர் இவர்கள் அனைவரும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அல்லது ஒற்றை பெற்றோர் உடையவர்கள்.

இதில் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 16 மாணவர்களும் காரை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர சமூக நலத்துறையின் கீழ் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் .

இந்தக் குழந்தைகள் இல்லத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் கோமளா, மேலாளர் மணிகண்டன் உள்ளிட்ட 47 பணியாளர்கள் இந்த சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூன் 20) வருகை தந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்த பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் திடீரென காரை கூற்றோடு பகுதியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் ஒற்றைப் பெற்றோர்கள் உள்ள மாணவர்களிடம் குழந்தைகள் இல்லம் குறித்தும் உணவு வழங்குவது குறித்தும் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் உரையாடிய முதலமைச்சர் அந்த நேரத்தில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அன்புள்ள அண்ணன்' என்று ஆரம்பித்துவிட்டு ஓபிஎஸ்ஸை கடிதத்தில் வறுத்தெடுத்த ஈபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details