ராணிப்பேட்டை: 2021 - 22 ஆம் ஆண்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி தனி நபர்கள் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத்தொகை தனிநபரும், அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய அரக்கோணத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அரக்கோணம் அடுத்த பெருமூச்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த குமரவேல் என்பவர் போலியான அடங்கல் தயாரித்துக் கொடுத்து, நெல் விற்பனை செய்தது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நெல் கொள்முதலில் ரூ.8 கோடி முறைகேடு: சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை மேலும், போலியான அடங்கல் கொடுத்ததற்காகவும், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபரும், அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெருமூச்சி கிராம நிர்வாக அதிகாரி குமரவேல் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் குமாரவேல் பாண்டியன் ஆகிய இருவரையும் வேலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்களை மூட வேண்டும்" - மேயர் பிரியா பதில் என்ன?