தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து :சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் - சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து
விபத்து

By

Published : Apr 27, 2021, 10:05 PM IST

ராணிப்பேட்டை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் அருகே வேலூரை நோக்கி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கர டயர் திடீரென வெடித்தது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நெடுஞ்சாலை தடுப்வை உடைத்து எதிர்ப்புற சாலையின் குறுக்கே பாய்ந்தது. சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு அதிவேகமாக சென்ற பின் சாலை ஓரமாக நின்றது.

அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து

இந்த விபத்தின்போது எதிர்ப்புற சாலையின் வழியே வாகனங்கள் ஏதும் வராத காரணத்தினாலும், ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டின் காரணமாகவும் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட பயணிகளும் காயமும் இன்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து ரத்தினகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details