பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அதாவது 5 கிலோ மீட்டர், 11 கிலோ மீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், வயது அடிப்படையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, அம்மூர், மாந்தாங்கல், முத்துக்கடை ஆகிய நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதல் பரிசு பெற்ற வீரருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி, மேக்ஸி கேப் ஓடாது.. பின்னணி என்ன?