தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாவில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆற்காடு வட்டாட்சியர், டிரைவர் கைது! - Tiruvannamalai

பட்டா திருத்தம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய ஆற்காடு வட்டாட்சியர், டிரைவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய ஆற்காடு வட்டாட்சியர் டிரைவர் கைது
லஞ்சம் வாங்கிய ஆற்காடு வட்டாட்சியர் டிரைவர் கைது

By

Published : Feb 14, 2023, 10:55 PM IST

இராணிப்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் செய்நத்தல் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவருக்குச் சொந்தமான பூர்வீக சொத்து ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் உள்ளது. இந்த சொத்தின் பட்டா கடந்த 1982ஆம் ஆண்டில் UDR-ல் பிழை ஏற்பட்டதாக சகாதேவன் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பட்டா திருத்தம் செய்வதற்காக முயற்சித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பட்டா திருத்தம் செய்வதற்காக ஆற்காடு வட்டாட்சியராக செயல்பட்டு வந்த சுரேஷ், சகாதேவனிடம் பட்டா பிழை திருத்த ரூபாய் 15,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. மேலும் சுரேஷ் லஞ்சமாக கேட்ட பணத்தை அவரது டிரைவர் பார்த்திபனிடம் கொடுக்கும் படி சகாதேவனிடம் கூறியுள்ளார்.

வட்டாட்சியர் லஞ்சமாக கேட்ட பணத்தை சகாதேவன் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அவரது டிரைவர் பார்த்திபன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பெரம்பூர் நகை கொள்ளை பல நாள் திட்டம்; இதை விசாரிக்க 2 தனிப்படைகள் - சென்னை காவல் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details