ராணிப்பேட்டை:ஆற்காடு அண்ணா சிலை அருகில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான ரவி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர்.
'கறி' சாப்பிடுபவர்கள் பட்டியல் சமூகம்.. அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு! - Jim sankar caste issue
கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் பட்டியல் இனத்தவர்கள் என அதிமுக நகர செயலாளர் ஒருவர் மேடையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் பட்டியலினத்தவர்கள்.. அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு!
அப்போது ஆற்காடு நகர அதிமுக செயலாளர் ஜிம் சங்கர் பேசுகையில், "கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் பட்டியலினத்தவர்கள்" என கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே திமுக பிரமுகர்கள் சிலர், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தலித் மக்களை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி வீடியோ.. கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை