ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாலயம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பரத் (13). ஆறுமுகமும், மகன் பரத்தும் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று (பிப்.12) இருவரும் மீன்பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளனர்.
ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற ஆறுமுகம், வலையை வீசும் போது நிலைதடுமாறி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன் பரத், தந்தையை காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கியதால், தந்தையும், மகனும் மாயமாகினர்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஆற்காடு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கிய இருவரையும் தீவிரமாக தேடினர்.