தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்கு எதிராக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! என்ன காரணம்?

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கைவிட்டு, அதனை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு வேண்டாம்.. அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு வேண்டாம்.. அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Feb 7, 2023, 7:12 AM IST

பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு, நேற்று (பிப்.6) தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், “சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் 6 ஆயிரத்து 750 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கைவிட்டு, அந்த திட்டத்தை சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளில் தாமதம் வேண்டாம் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details