தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவும்... எதிர்ப்பும்... - ராணிப்பேட்டை மாவட்டச் செய்திகள்

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும், ஆதரவாக மதுப்பிரியர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ranipet
ranipet

By

Published : Feb 17, 2020, 10:21 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையை அடுத்த ரஃபீக் நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக அரசு டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்தக் கடையால் பெண்கள், பள்ளி மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிவருவதாகக் கூறி பொதுமக்கள் போராடிவந்தனர். இந்நிலையில் அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு ஆதராகவும், எதிராகவும் போராட்டம்

அதே நேரத்தில், மதுக்கடையை மூடக்கூடாது என மதுப்பிரியர்கள் பெண்களுக்கு எதிராக பதில் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க:டாஸ்மாக் - அமலுக்கு வந்தது மதுபான விலை உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details