ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி. வேலூர், காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியான இங்கு உள்ள சுமார் 300 வீடுகளில் தோராயமாக 992 வாக்குகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக டயரை எரித்து அதிலிருந்து ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
இந்தத் தொழிற்சாலையில், டயர்களை எரிப்பதனால் இப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இதனால், டயர் தொழிற்சாலையை நிரந்தரமாக அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டும், மனுக்கள் கொடுத்தும் உள்ளனர். முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தத் தொழிற்சாலையை அகற்றக் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்றைய பொதுத்தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை அங்குள்ள வாக்குச்சாவடியில் 20 வாக்குக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பாக யாரேனும் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்றும் தொடர்ந்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், காட்பாடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராமு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சிக்கு வந்தால் தொழிற்சாலை முற்றிலுமாக அகற்றப்படும். இத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான துரைமுருகன் உங்களது பிரச்சினையைக்கூட கேட்க இங்கு வெளியே வரவில்லை" என்றார்.
பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக வேட்பாளர் இதையும் படிங்க:தேர்தலை புறக்கணித்த கத்தாரிகுப்பம் கிராம மக்கள்!