ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி தெருவைச் சேர்ந்தவர், ஜோனா (30). இவருக்கு ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஜோவினின் தலையில் சாப்பாடு வைக்க பயன்படும் பாத்திரம் (குண்டான்) சிக்கியுள்ளது.
பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.