தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோருக்கு எச்சரிக்கை.. அரிசி சாப்பிட்ட 8 வயது சிறுமி உயிரிழப்பு - அரக்கோணம் அருகே எட்டு வயது சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை சாப்பிட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்தார்.

died
அரிசி

By

Published : Mar 26, 2023, 7:18 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்குட்பட்ட சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (50). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் நிகிதா லட்சுமி (8) அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி நிகிதா நேற்று(மார்ச்.26) மாலை சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை நான்கைந்து தடவை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் திடீரென அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், பெற்றோர் சிறுமியை பரமேஸ்வர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கும் போதிய வசதிகள் இல்லாததால், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி அங்கிருந்த செவிலியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரவு நேரத்தில் பெற்றோர் நிகிதா லட்சுமியை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் நிகிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகிதா லட்சுமியின் தாய் பரமேஸ்வரி, "நிகிதா சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை சாப்பிட்டார். மேலும் பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்தார். ஒரு நாள் மட்டுமே அதிகளவு காய்ச்சல் இருந்தது. பின்னர் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பின்னர் இறந்துவிட்டார். உடலில் வேறு எந்த கோளாறும் இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. எதனால்? எப்படி மரணம் ஏற்பட்டது என தெரியவில்லை" என்று கண்ணீர்மல்க கூறினார். இது தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மெரினாவில் வயலின் வாசித்து கல்வி கட்டணத்துக்கு உதவி கேட்ட கல்லூரி மாணவர்

ABOUT THE AUTHOR

...view details