தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி: 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ராணிப்பேட்டை: காற்றாலை உதிரிபாகம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

container
container

By

Published : Dec 11, 2020, 1:47 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே நேற்று (டிச. 10) இரவு சென்னை அடுத்த செங்கல்பட்டு சிப்காட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தொழில் நிறுவனத்திற்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி
அப்போது கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நின்றதால், சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருவதால், பல இடங்களில் ஒரு வழிப்பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக சாலை ஓரங்களில் ஈரமாக இருந்ததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.

கிரேன் உதவியுடன் அந்த வாகனத்தை இழுக்கும்போது சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் காவேரிப்பாக்கம் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இரைதேடி வந்த பெண் யானைக்கு நேர்ந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details