சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அருகே இன்று (அக். 11) காலை 6 மணியளவில் கொண்டபாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது. அதன் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் அப்பகுதிக்கு சென்று காரில் இருந்த 6 ஆடி நீளமுள்ள 11 செம்மரக் கட்டைகள் மற்றும் 3 ஆடி நீளமுள்ள மூன்று செம்மரக் கட்டைகள் என மொத்தம் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 14 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அரக்கோணம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம், செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர், ராணிப்பேட்டை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து கொண்டபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! - Vellore District News
ராணிப்பேட்டை: கொடைக்கல் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
செம்மரக்கட்டைகள்
Last Updated : Oct 11, 2020, 8:13 PM IST