தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் - 16 lakh worth Security equipment

ராணிப்பேட்டை: மாவட்ட காவல் துறை சார்பில் பதினாறு லட்சம் மதிப்பீட்டில் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (அக். 06) வழங்கப்பட்டது.

Police
Police

By

Published : Oct 6, 2020, 3:59 PM IST

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகத் தமிழ்நாடு அரசால் நிர்வாக காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டது.

அதன்பின் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் நடக்காத வண்ணம் தடுப்பதற்காகவும் ஜனவரி 2020ஆம் ஆண்டு பிரத்யேக ரோந்து அமைப்பு (Dedicated Beat System) உருவாக்கப்பட்டு அதனை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் தொடங்கிவைத்தார்.

இந்தப் பிரத்யேக ரோந்து அமைப்பு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றததையடுத்து இதனை நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தவும், திறம்பட செயல்படவும் மாவட்டத்திலுள்ள 1150 பட்டா புத்தகங்களையும் கியூஆர் கோட் (QR Code) மூலமாக ஸ்கேன் செய்யும் ரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System-BMS) என்ற செயலியை கடந்த ஜூன் மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடங்கிவைத்தார்.

இச்செயலி மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ரோந்து அலுவலர்களின் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

மேலும் காவல் துறையினை நவீனப்படுத்தும் நோக்குடன் ரோந்து காவலர்களின் விபத்துகளைத் தவிர்க்கும் வண்ணம் ஒளி பிரதிபலிக்கும் ஆடைகள் (Reflective Jackets), போக்குவரத்தினை சீர்செய்ய கோல் விளக்குகள் (Baton Lights), முக்கிய நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்காக உடலில் அணியும் கேமராக்கள் (Body Worne Cameras), பொதுமக்கள், காவல் துறையின் பாதுகாப்பினை உறுதிசெய்ய டார்ச் லைட்டுகள், ஆய்வாளர்களின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் முக்கிய சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவற்றை கண்காணிக்க வாகனத்தில் பொருத்தும் கேமராக்கள் (Dash Board Cameras), காவல் துறை ரோந்து ஈடுபடுவது அனைவருக்கும் தெரியும் விதத்தில் (Visible Policing) ரோந்து வாகனத்தின் மேற்புறத்தில் வண்ண நிறத்தில் எரியும் விளக்குகள் (Blinkers) ஆகியவை சுமார் பதினாறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வாங்கப்பட்டது.

அதனை இன்று(அக். 06) வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் காவல் துறையினருக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறைத் தலைவர் காமினி (டிஐஜி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், ரோந்து அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தென்காசியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details