ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா பள்ளியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியின் உத்தரவின் பேரில் 100 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 40 சாதாரண படுக்கைகள் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
கரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெறுகிறது - அமைச்சர் காந்தி
ராணிப்பேட்டை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 1,000 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், கரோனா தடுப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் ஆர். காந்தி பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் பங்களிப்புடன் 1,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்குக் கரோனா தொற்று உறுதி!