ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள முத்துசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (24). உறவினர் நிலம் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்துவந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் நிலப் பிரச்சினை தொடர்பாக நேற்றிரவு ராஜா, அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (24), சோணைமுத்து (29) தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஹேமநாதன், சோணைமுத்து ஆகியோர் ராஜாவை கல்லால் தாக்கியுள்ளனர்.