ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள திருவரங்கம் ஊராட்சிமன்றத் தலைவர் அன்னபூரணம். இவரது மகன் பொன்னிவளவன் (30). இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த குமரவேலு மகன் மலைச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கருப்பன் கோயில் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி பொன்னிவளவனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.