ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அய்யனார் கோயில் விளக்கு அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஏனாதி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (24) என்பவரை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர்.
பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது - காவல்துறை விசாரணை
ராமநாதபுரம்: கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த , பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோதனையில், அவர் பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பட்டாக்கத்தியையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மகாலிங்கத்தின் மீது கமுதி, கடலாடி, கோவிலாங்குளம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. பின் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.