ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரின் இரண்டு மகன்கள் காந்தி, ராஜேஷ் ஆகியோர் ராமேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக வசிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை.16) மதியம் 1 மணியளவில் குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது, ஒரு கட்டத்தில் அண்ணன் காந்தி, தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.