தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு; சாயல்குடியில் சோகம்! - மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: சாயல்குடியில் வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
death

By

Published : Jan 20, 2020, 7:47 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது வீட்டில் ஜனவரி 18ஆம் தேதி காலை 6 மணியளவில் உறவினரான அம்மாசி என்பவரின் மகன் முத்துக்குமார் (25), தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் மின்மோட்டாரை இயக்கியுள்ளார்.

அப்போது, அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமாரின் உடல் சாயல்குடி ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாக்குறுதியை நிறைவேற்ற சொந்த பணம் 8 லட்ச ரூபாயை செலவழித்து ஊராட்சியை உயர்த்தும் தலைவர்

மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details