ராமநாதபுரம்: சோழந்தூர் அடுத்து உள்ள சீனாங்குடியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு 19 வயதில் மனிஷா என்கிற மகள் உள்ளார். இவர் அரண்மனை அக்ரகாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தக பிரிவில் பணியாற்றி வந்தார்.
நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் மனிஷா வேலை பார்க்கும் மருத்துவமனை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.