தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம் காதல் ஜோடிகள் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் - Tirunelveli

ராமநாதபுரம்: திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளம் காதல் ஜோடிகள் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளம் காதல் ஜோடிகள் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்
திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இளம் காதல் ஜோடிகள் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்

By

Published : Jun 21, 2021, 7:54 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ், ஜோதிலட்சுமி ஆகிய இருவரும் பட்டதாரிகள். இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இது இவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும் இவர்களை கண்காணித்து கண்டித்துள்ளனர்.

தஞ்சமடைந்த காதலர்கள்

அதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து நண்பர்கள் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் தஞ்சமடைந்தனர். அப்போது அவர்கள், ‘நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமண வயது அடைந்துவிட்டோம்.

ஆகையால் எங்களுக்கு சட்டப்படி திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது. பெண்ணின் தகப்பனார் கந்துவட்டி தொழில் செய்துவருவதால் எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக கூலிப்படைகளை வைத்து மிரட்டி வருவதால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் எங்களை காப்பாற்ற வேண்டும்’ என காதல் ஜோடிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசி திருமணம் செய்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details