தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை ஆற்றில் அடித்துச்சென்ற இளைஞர் - வைரலான வீடியோ - வைகை ஆற்றில் அடித்துச்சென்ற இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வைகை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆற்றில் அடித்துச் செல்லும் இளைஞர்

By

Published : Nov 18, 2019, 2:23 AM IST

தமிழ்நாட்டின் மிக முக்கிய அணைகளில் ஒன்றான வைகை அணையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையிலிருந்த்து குறிப்பிட்ட அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் வைகை ஆறு வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், பரமக்குடி தெளிச்சத்தநல்லூர் கிராமத்தில் உள்ள தடுப்பணையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் இளைஞர் ஒருவர் தடுப்பணையின் மேல்பகுதியில் இருந்து குதித்து குளித்த போது, அதிகநீர் வரத்து காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆற்றில் அடித்துச் செல்லும் இளைஞர்

இதைப்பார்த்த சக இளைஞர்கள் அவரை சாதுரியமாக மீட்டனர். இதனால் கை கால்களில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இளைஞர் ஆற்றில் அடித்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details