சதுப்பு நிலக் காடுகள் சூழலியல் மாற்றத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. மேலும், இது பல்லாயிரக்கணக்கான சிறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் திகழ்ந்துவருகிறது. இயற்கைப் பேரிடர்களிலிருந்து காத்துக் கொள்வதற்காக மிக முக்கியமாக கடலோரப் பகுதிகளில் வளரக்கூடியவை சதுப்பு நில தாவரங்கள். உலகம் முழுவதும் பிப்ரவரி 2ஆம் தேதி சதுப்புநில நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் வனத்துறையின் சார்பில் தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 150 மாணவிகள் பங்கேற்றனர்.