உலக சுற்றுச்சூழல் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் #publictransportchallenge என்ற வாசகத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராமேஸ்வரத்தில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம் - உலக சுற்றுச்சூழல் தினம்
ராமேஸ்வரம்: பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பு சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
![ராமேஸ்வரத்தில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3478856-thumbnail-3x2-ram.jpg)
rameshwaram
ராமேஸ்வரம்
இந்திய கடற்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பின்பு பசுமை ராமேஸ்வரம் வளாகத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழலின் அத்தியாவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.