தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் சந்தேகமான முறையில் பெண் கொலை! - ராமநாதபுரம் க்ரைம் செய்திகள்

ராமநாதபுரம்: இரட்டை யூரணியில் பெண்மணி ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயராணி
விஜயராணி

By

Published : Sep 17, 2020, 8:13 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் இரட்டை யூரணியைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மனைவி விஜயராணி(52). இவர் கணவரை இழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், இன்று (செப்.17) இவர் உடலில் ரத்தக் காயங்களுடன் சந்தேகமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உச்சிப்புளி காவல்துறையினர், விஜயராணி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில், விஜயராணி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. மேலும் கழுத்து, முகம் காயமடைந்துள்ள நிலையில் அவர் அணிந்திருந்த உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் இக்கொலை நகைக்காக நடந்திருக்கலாமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து அவரது வீட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், கணவர் இறந்தபின் விஜயராணி தனியாகத் தான் வசித்து வந்தார் என்றும் இடையில் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தை சேர்ந்த ஜஸ் விற்பனை செய்யும் ஒருவர் மட்டும் அடிக்கடி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றது தெரியவந்தது. தற்போது காவல் துறையினர் ஐஸ் வியாபாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details