தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தைத் தாண்டிய உறவு - ராமநாதபுரத்தில் பெண் கொலை - ராமநாதபுரம் கிரைம் செய்திகள்

பரமக்குடி அருகே தந்தையுடன் திருமணத்தைத்தாண்டிய உறவில் பழகிய பெண்ணை, அவரது மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் வெட்டிக்கொலை
பெண் வெட்டிக்கொலை

By

Published : Nov 10, 2021, 8:49 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர், பாகம்பிரியாள் என்ற அன்புச்செல்வி (37). இவருக்கும் மகாலிங்கம் என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாகம்பிரியாள், வேந்தோணி அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் (47) என்பவரிடம் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துப் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

தந்தையின் தவறான பழக்கத்தால் கொலைகாரன் ஆன மகன்

இவர்களின் பழக்கத்தால் சேகர் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேகரின் மகன் சுப்பிரமணியன் (20) நேற்று ( நவ.9) பாகம்பிரியாள் வீட்டிற்குச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றியபோது ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாகம்பிரியாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாகம்பிரியாளை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்குச்சென்ற பரமக்குடி நகர் காவல் துறையினர், சுப்பிரமணியனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குமரியில் இளைஞர் ஆணவக்கொலை..?: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details