தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பெண்கள்! - Ramnad District Election news

ராமநாதபுரம்: பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று (ஏப். 2) அதிமுக வேட்பாளருக்கு அப்பகுதி சிறுமிகள், பெண்கள் ரோஜா பூ கொடுத்தும், ரோஜா இதழ்களைத் தூவியும் அவரை வரவேற்றனர்.

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை, ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற பெண்கள்
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை, ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற பெண்கள்

By

Published : Apr 3, 2021, 6:22 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

வாக்காளர்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள் பல்வேறு வித்தியாசமான பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பெண்கள்

பரமக்குடி (தனி) தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று (ஏப். 2) பரமக்குடி நகர்ப் பகுதிகளில் பரப்புரை செய்தார்.

அதிமுக வேட்பாளருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு

அப்போது, பாலன் நகரில் பரமக்குடி இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் திலகவதி தலைமையில் கூடியிருந்த சிறுமிகள், பெண்கள் ரோஜா மலர்கள் கொடுத்தும், ரோஜா இதழ்களைத் தூவியும் அதிமுக வேட்பாளரை வரவேற்றனர்.

அதிமுக மூத்த நிர்வாகி தனிகோடி, வேட்பாளர் சதன் பிரபாகருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பரமக்குடி (தனி) நகர் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் பரப்புரையை முடித்து கேரளா சென்ற யோகி ஆதித்யநாத்!'

ABOUT THE AUTHOR

...view details