தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 197 பேருக்கு கரோனா உறுதி - ramanathapuram district news

ராமநாதபுரம்: இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா
கரோனா

By

Published : May 3, 2021, 10:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தின் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1227ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

முறையாக முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details