ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருவிழா. இந்த ஆண்டுக்கான ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜூலை 25ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் சாலையை அரசு சரிசெய்யுமா? - devotees
ராமநாதபுரம்: ஆடித் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அரசு விரைந்து சாலையை சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இத்திருவிழாவின் முதல் நாளான ஜூலை 25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். கால பூஜையைத் தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்குள்ள அம்பாள் தங்கக்கொடி மரத்தில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆடித்திருவிழா தொடங்குகிறது.
இந்நிலையில், ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் நகராட்சி நிர்வாகம் பாதாளச் சாக்கடைக்காக பெரிய குழிகள் தோண்டி, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் கோயிலுக்குச் செல்லும் வழி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. எனவே இந்த சாலையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.