ராமநாதபுரம் மாவட்டம் எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அவரது கணவர் தங்கநாயகம் கண்ணப்பன் அபுதாபியில் வேலை செய்துவந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தனலட்சுமி, கணவரின் உடலை மீட்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உறவினர்களுடன் சென்று மனு அளித்துள்ளார்.
அபுதாபியில் உயிரிழந்த கணவனரின் உடலை மீட்டுத்தரக் கோரிக்கை - tamilnadu workers abu dhabi
ராமநாதபுரம்: அபுதாபியில் உயிரிழந்த கணவனரின் உடலை மீட்டுத்தரக் கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
wife-request-to-redeem-the-body-of-husband
அந்த மனுவில் "அபுதாபியில் உயிரிழந்த எனது கணவனரின் உடலை சொந்த ஊரான எருமைப்பட்டிக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அந்த மனுவை பெற்ற ஆட்சியர் வீரராகவ ராவ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்து அவரை அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க:அபுதாபியிலிருந்து வந்த 181 பேரில் 5 பேருக்கு கரோனா அறிகுறி!