ராமநாதபுரம்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சௌதியில் இருக்கும் கணவரை சொந்த ஊர் அழைத்து வரக் கோரி குழந்தைகளுடன் வந்து அவரது மனைவி மனு அளித்தார்.
சௌதியில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கணவர் - சொந்த ஊர் அழைத்து வரக் கோரி மனைவி மனு!
எனது கணவரை தாயகம் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்புகிறேன். ஆகவே, எனது கணவரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குளவிப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயரேகா. இவரது கணவர் வெள்ளைச்சாமி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவிலுள்ள ரியாத்தில் பணிபுரிவதற்காக சென்றுள்ளார். ஜனவரி மாதம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் அங்கு பணிபுரிபவர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது கணவனை சொந்த ஊர் அழைத்து வரக் கோரி விஜயரேகா மனு அளித்தார். அப்போது அவர், நான் எனது இரண்டு குழந்தைகளுடன் மிகவும் கவலையுடன், மன உளைச்சலுடன் இருக்கிறேன். எனது கணவரை தாயகம் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்புகிறேன். ஆகவே, எனது கணவரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.