தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போன கணவர்... கலெக்டரிடம் மனைவி மனு - Ramanadharpuram district Collector

ராமநாதபுரம்: 'சவுதிஅரேபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், தனது கணவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார் மனு அளித்துள்ளார்.

மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Jun 29, 2021, 10:25 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள சொக்காணை கிராமத்தை சேர்ந்தவர் முக்கூரான். இவர் கடந்த 22 ஆண்டுகளாக சவுதியில் வேலை பார்த்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து மீண்டும் ரியாத்திற்கு சென்றவர் தனது மனைவி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் எந்த தொடர்பிலும் இல்லை.

இதனால் ரியாத்தில் முக்கூரானுடன் வேலை செய்தவர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. எனவே அதிர்ச்சியடைந்த முக்கூரான் மனைவி மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "இரண்டு ஆண்டுகளாகியும் கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஒன்றிய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பலமுறை புகார் மனு அளித்தும் 'முக்கூரான்' பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கணவரை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து இரண்டு பேர் உடல் மீட்பு!'

ABOUT THE AUTHOR

...view details