தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை - கணவர் மீது மனைவி புகார்

ராமநாதபுரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி 10 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை

By

Published : Aug 31, 2021, 1:02 AM IST

ராமநாதபுரம்: காயக்காரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோதினி (25). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பதிவு திருமணம் நடந்தது.

பின்னர், சுப்பையா சுரேஷ் நெதர்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திரும்பி வந்ததும் முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 சவரன் நகையும், மாப்பிள்ளைக்கு ஒன்பது சவரன் நகையும், 1 லட்சம் ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருள்கள், 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

கணவர் மீது மனைவி புகார்

திருமணம் நடந்த நாள் முதல் சுப்பையா சுரேஷ், மனைவி வினோதினியிடம் கூடுதல் வரதட்சணையாக 10 லட்சம் ரூபாய் வாங்கிவரும்படி கூறி கொடுமைப்படுத்தியுள்ளார். தினமும் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

இதற்கு அவரின் தந்தை லோகநாதன், தாய் தெய்வநாயகி, சகோதரன் அருண்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து வினோதினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட மகள் மீது ஆசிட் வீச்சு; கர்ப்பிணி என்றும் பாராத கொடூரத் தந்தை

ABOUT THE AUTHOR

...view details