ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த பெருமாள், அம்பிகாவதி. ஆனந்த பெருமாள் நாள்தோறும் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று (டிச.17) காலையிலும் ஆனந்த பெருமாள் அவரது மனைவியிடம் சண்டையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்பிகாவதி, வீட்டின் அருகே இருந்த அம்மி கல்லை எடுத்து, ஆனந்த பெருமாள் தலையில் போட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.