வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில தினங்களாக ராமநாதபுரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
நேற்று (நவ.15) இரவு தொடங்கிய மழையானது கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று (நவ.16) காலை வேலைக்கு செல்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.