ராமநாதபுரத்தில், தனியார் யோகா நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த நடிகர் எஸ்வி சேகர் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நடிகர் சங்க கட்டடம் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் ஐந்து கிரவுண்ட் நிலம் அரசுக்கு சொந்தமானது அதை பயன்படுத்தினால் பிற்காலங்களில் ஆட்சி மாற்றம்வரும் பொழுது நாடகக் கலைஞர்களை பாதிக்கப்படுவர். மக்களுக்கு நேர்மையான அரசியலை கொடுக்க நினைக்கும் நடிகர் கமல்ஹாசன், சீமான் நடிகர் சங்க ஊழல் குறித்து பேசாமல் இருப்பது ஏன்?
ராஜராஜசோழன் சர்ச்சை... சாதிக்காரர்களால் அடிபடுவர்! அச்சுறுத்தும் எஸ்.வி. சேகர் - எஸ்.வி சேகர்
ராமநாதபுரம்: ராஜராஜசோழன் சர்ச்சையில், சாதியை வைத்து பெரிய இடத்தை பிடிக்க விரும்புபவர்கள் சாதிக்காரர்களால் அடிபடுவர் என பாஜகவின் முக்கியப் பிரமுகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
கமல், சீமான் மெளனம் காப்பது ஏன் - எஸ்.வி சேகர்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு இருந்தாலே அதிக வாக்குகளைப் பெற்று இருக்கும். அதேபோல் மாநில பாஜக தன்னை பயன்படுத்தவில்லை என்று கூறினார். ராஜராஜசோழன் சர்ச்சையில், சாதியை வைத்து பெரிய இடத்தை பிடிக்க விரும்புபவர்கள் சாதிக்காரர்களால் அடிபடுவர்" எனத் தெரிவித்தார்.
Last Updated : Jun 22, 2019, 9:27 AM IST