ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை, அழகன்குளம் பகுதிக்கிடையில் உள்ள பாக் ஜலசந்தி கடற்கரைப் பகுதியில், இறந்த நிலையில் புள்ளி சுறா மீன் ஒன்று இன்று கரை ஒதுங்கியது. உயிரிழந்த சுறா ஒன்னரை டன் எடையும், 6.3 மீட்டர் நீளமும், 3.6 மீட்டர் சுற்றளவு கொண்டது.
35 முதல் 40 வயதுடைய இந்த ஆண் சுறா, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பாறை மீது மோதி இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த சுறாவை உடற்கூறாய்வு செய்து பின்னர் அதனை புதைத்தனர்.