ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
இந்நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாட்டுப்படகு மீனவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் தென்மேற்கு திசையில், மே 19 முதல் 21ஆம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்கச் செல்லுமாறு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை(மே.22) மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எவரும் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளார் .