தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீனவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோம்' - latest ramanadhapuram news

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த விடமாட்டோம் என மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

we-will-not-allow-the-implementation-of-the-union-govt-plan-against-fishermen
மீனவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்தவிடமாட்டோம்- அமைச்சர் சூளுரை

By

Published : Jul 16, 2021, 10:43 PM IST

ராமநாதபுரம்:ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வுசெய்வதற்காக தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அரசு அலுவலர்கள் வந்திருந்தனர்.

அப்போது குந்துகால் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இலங்கை அரசால் பறிமுதல்செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகள் கொண்ட தரமான மீன்பிடித் துறைமுகமாக மூன்று குந்துகால் மீன்பிடித் துறைமுகம் அமையும்.

மீனவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோம் - அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்காக ரூ.200 கோடி செலவானாலும் பரவாயில்லை. இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பின்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்த விடமாட்டோம். கச்சத்தீவை மீட்டு தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம். மீனவர்களின் பாதுகாவலனாக திமுக அரசு அமையும்" என்றார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசா, மத்திய அரசா? குழம்பிய கே.என். நேரு

ABOUT THE AUTHOR

...view details