தமிழ்நாடு கடலோரப் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மொத்தம் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.
’தடுப்பூசி செலுத்திய பின்புதான் கடலுக்குள் செல்வோம்’ - ராமேஸ்வரம் மீனவர்கள் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம்: மீன்பிடி தடைக் காலம் முடிவடையவுள்ள நிலையில் மீனவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பின்பு தான் கடலுக்குள் செல்வோம் எனவும், ஜீலை 1ஆம் தேதி கடலுக்குள் செல்ல தாங்கள் தயாராக உள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சூழலில், வருகின்ற ஜூன் 15ஆம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மீன்பிடி தடைக்காலம் முடிந்தாலும் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் கடலுக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.