தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்கும் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி: ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி - Ramnad Voter Pledge Acceptance Ceremony

ராமநாதபுரம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் பேசும் மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் பேசும் மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 10, 2021, 9:47 PM IST

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவருகிறது.

100% வாக்குப்பதிவு

அதன் ஒரு பகுதியாக முதல்முறை வாக்காளர்களிடம் 100 விழுக்காடு வாக்குப்பதிவு, நேர்மையான முறையில் வாக்களித்தல் போன்றவை குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வை தொடங்கிவைத்தனர்.

மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உறுதிமொழியை வாசிக்க, மாணவிகள் அனைவரும் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை தவறாமல் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details